Monday, November 28, 2016

Eternal Truth

(மாலை) (evening)
பசிக்குதும்மா..
I feel hungry
கொஞ்சம் பொறுத்துக்கோடா கண்ணா
Hold a while dear..
இல்லம்மாநேத்தைக்கப்பறம் ஒண்ணுமே சாப்பிடலையேம்மா..
Look, I haven’t had anything from yesterday..
தெரியும்டா கண்ணா, கொஞ்சம் பொறுத்துக்கப்பா
I know.., just try and hold just a little while more dear..
எவ்வளவு நேரம்ம்மா..
How long?
கொஞ்சம் தண்ணி வேணா குடிக்கிறயா?
Would you like to drink some water?
அம்மா எனக்கு தாகம் இல்லம்மா .. பசிக்குதுண்ணு சொன்னேன்
I am not thirsty… I said I am hungry!
ஆமாம்டா கண்ணா தெரியதுடா எனக்கு, ஆனா இங்கே ஒண்ணுமே கிடைக்கலையே? எல்லா கடையும் இன்னிக்கு மூடியிருக்கேப்பா..
I know dear, but look there is nothing available.. all shops are closed!
வேற எங்கயாச்சும் பாக்கலாமாம்மா..
Shall we look elsewhere?
இல்லடா கண்ணா, இன்னிக்கு ஏதோ போராட்டமாம், எதுவுமே தெறக்காதாம், எந்த வண்டியும் ஓடாதாம்.. நாம நகரக்கூட முடியாது போல இருக்குஅதனாலதான் சொல்றேன், இன்னிக்கு ராத்திரி வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கப்பா..  நாளைக்கு காலைல உனக்கு ஆகாரம் நிச்சயமா வாங்கித்தறேன்..
We can’t.. looks like there is some kind of protest going on.. all shops are closed, no vehicle is plying, we can’t even move about.. just hold on till the night, I will definitely get you something tomorrow morning..
என்னம்மா இது .. என்னால இந்த பசியால வலிக்கறது பொறுத்துக்கக் கஷ்டமா இருக்கேம்மா..
No, I can’t .. being hungry hurts!
சமத்தோல்லியோ, இதோபார் இப்பவே சாயந்தரம் ஆயிடுச்சு.. இன்னும் கொஞ்ச நேரம்தான்..  இப்ப தூங்கு. காலைல எந்திரிச்ச ஒடனே உனக்கு எல்லாம் வாங்கித்தறேன்.
Please dear…, just try… it is already evening now, just some time more… if you can get some sleep, I will get something the first thing when we wake up tomorrow morning..
சரிம்மா
Okay, I’ll try..
(காலை) (morning)
எந்திரிடா கண்ணா.. இதோபார் சுடச்சுட இட்டிலி வாங்கி ந்திருக்கேன்..
Hello, good morning, wake up, look what I have got for you… hot hot pancakes!
ஐயா.. இப்போதான் உயிரே வந்தா மாதிரி இருக்கு..
Wow… only now I feel good… give me some..
இன்னும் ரெண்டு போட்டுக்கோ..
Sure,,  take some more…
சரிம்மாநல்லா இருக்குல்லே?..
sure,, isn’t it yummy?
ஆமாண்டா கண்ணாநல்லா சாப்பிடுஇந்தா இன்னும் ரெண்டு போட்டுக்கோ
Of course, it is yummy… eat well… take some more..
போறும்ம்மாஇதுக்கு மேல என்னால முடியாது..
No, no,  I can’t take more.. I am done..
அப்புறம் நேத்திக்கு மாதிரி திரும்பி எதுவும் கிடைக்காம போனா ரொம்ப கஷ்டம்ப்பா.. இன்னும் ரெண்டோ மூணோ இப்ப கிடைக்கும்போதே சாப்பிட்டா தான் நல்லது..
Look, if something like yesterday happens, we won’t get anything, so just take a little more when these are available, they are yummy too..
இல்லம்மா.. இதுக்குமேல முடியவே முடியாதும்மா
Yummy yes, but I am done, I can’t take more..
கொஞ்சம் கஷ்டப்பட்டு சாப்பிடுடுடா கண்ணா.. அப்பறம் நேத்தி மாதிரி ஒண்ணும் இல்லேன்னா உன்னால தாங்க முடியாது, அழுது அமக்களம் பண்ணுவே
Come on,  just try.., I know you can;t bear hunger, you will make a hue and cry when hungry..
நெஜந்தான்.. என்னால பட்டினியா இருக்குவும் முடியலே.. அதுக்காக இப்பவே நெறைய சாப்பிடவும் முடியலே.. என்னை கட்டாயப்படுத்தாதேம்மாஎன்னால  முடியவே முடியாதும்மாபோறும் போறும்
True I can’t bear hunger, but that does not mean I can take loads of food too.. please don’t compel, I am done, I can’t take a morsel more..
இது என்ன உரையாடல் என்று கேட்கிறீர்களாஇது இன்று நடந்தந்தல்ல. குறைந்தது ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்ததுயாருக்கு இடையில் என்று தெரிகிறதாசொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்நமக்கு நன்கு அறிமுகமான அவ்வைப் பாட்டிதான் பேசுகிறார்யாருடனா.. இந்தப் பாடலைப் பாருங்கள், உங்களுக்கே புரியும்..
Wonder what this conversation is?  This did not happen today.. this happened at least a thousand years ago.  One of the parties is well known to us, the great poetess Avvai.  Look at this verse, you will know for yourself who the other party is:
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்.
இருநாளுக்கேலென்றால் ஏலாய் ஒருநாளும்
என்நோவறியாய் இடும்பைகூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது!
You won’t skip food for a day;
Nor will you take at once for a couple of days; ;
You will go on whining and complaining without a care to my tussles.. dear my stomach,
It is difficult to live with you!
(நல்வழி பாடல் 11 – Nalvazhi – verse 11) (Nalvazhi is thought to have been written by the second Avvaiyar who lived in the period 9-10th century)